Kalittokai 11
((Originally extracted from master file ^KALI.OCP))
((Last updated on 2010 October 16th))
Metrical description (AR, pp. 79): iḵtu aintaṭit taravum nālaṭit tāḻicaiyum
acainilaiyākiya aṭainilaik kiḷaviyum nāṉkaṭic curitakamum peṟṟuvanta ottāḻicaikkali
A (taravu)
- {KALI 11-1} aritu āya aṟaṉ eyti aruḷiyōrkku aḷittal um
- {KALI 11-2} peritu āya pakai veṉṟu pēṇārai teṟutal um
- {KALI 11-3} purivu amar kātaliṉ puṇarcci um tarum eṉa
- {KALI 11-4} pirivu eṇṇi poruḷ vayiṉ ceṉṟa nam kātalar
- {KALI 11-5} varuvar kol vayaṅku iḻāay valippal yāṉ kēeḷ iṉi
- அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
- பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
- புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
- பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்
- வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி
B
- {KALI 11-6} aṭi tāṅkum aḷavu iṉṟi aḻal aṉṉa vemmaiyāl
- {KALI 11-7} kaṭiya ē kaṉam kuḻāay kāṭu eṉṟār a kāṭṭu uḷ
- {KALI 11-8} tuṭi aṭi kayam talai kalakkiya ciṉ nīrai
- {KALI 11-9} piṭi ūṭṭi piṉ uṇṇum kaḷiṟu eṉa um uraittaṉar ē
- அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற்
- கடியவே கனங்குழாய் காடென்றா ரக்காட்டுள்
- துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
- பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே
C
- {KALI 11-10} iṉpattiṉ ikantu orīi ilai tīnta ulavaiyāl
- {KALI 11-11} tuṉpuṟūum takaiya ē kāṭu eṉṟār a kāṭṭu uḷ
- {KALI 11-12} aṉpu koḷ maṭa peṭai acaiiya varuttattai
- {KALI 11-13} mel ciṟakarāl āṟṟum puṟavu eṉa um uraittaṉar ē
- இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீய்ந்த வுலவையால்
- துன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள்
- அன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
- மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே
D
- {KALI 11-14} kal micai vēy vāṭa kaṉai katir teṟutalāṉ
- {KALI 11-15} tuṉṉarūum takaiya ē kāṭu eṉṟār a kāṭṭu uḷ
- {KALI 11-16} iṉ niḻal iṉmaiyāṉ varuntiya maṭa piṇaikku
- {KALI 11-17} taṉ niḻalai koṭuttu aḷikkum kalai eṉa um uraittaṉar ē
- கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
- துன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள்
- இன்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
- தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே
E
F
- {KALI 11-19} iṉai nalam uṭaiya kāṉam ceṉṟōr
- {KALI 11-20} puṉai nalam vāṭṭunar allar maṉai vayiṉ
- {KALI 11-21} palli um pāṅku ottu icaittaṉa
- {KALI 11-22} nal eḻil uṇ kaṇ um āṭumāl iṭaṉ ē
- இனைநல முடைய கானஞ் சென்றோர்
- புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற்
- பல்லியும் பாங்கொத் திசைத்தன
- நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே